கர்நாடகத்தில் புதிதாக 523 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 523 பேருககு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-10-05 20:37 GMT
பெங்களூரு:

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

  கர்நாடகத்தில் நேற்று 87 ஆயிரத்து 303 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 78 ஆயிரத்து 808 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 14 பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 845 ஆக உயர்ந்துள்ளது.

  ஒரே நாளில் 575 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 29 ஆயிரத்து 8 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரு நகரில் 201 பேர், தட்சிண கன்னடாவில் 55 பேர், மைசூருவில் 33 பேர், துமகூருவில் 37 பேர், ஹாசனில் 23 பேர், உடுப்பியில் 19 பேர், சிக்கமகளூருவில் 48 பேர், உத்தரகன்னடாவில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் பெங்களூரு நகரில் 4 பேரும், தட்சிண கன்னடாவில் ஒருவரும், உத்தரகன்னடாவில் 3 பேரும், மைசூருவில் 2 பேரும் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர்.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்