ரியல் எஸ்டேட் அதிபர் கொலை முயற்சி வழக்கில் வாலிபர் கைது

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை முயற்சி வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-05 20:06 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் துறைமங்கலம் புதுக்காலனி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் பாரீஸ் செல்வம் என்ற பன்னீர்செல்வம் (வயது 52). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். பெரம்பலூரில் கடைவீதியில் உள்ள முக்கியமான கட்டிடத்தை வாடகைக்கு விடுவது தொடர்பாக ஏற்பட்ட இடப்பிரச்சினை முன் விரோதம் தொடர்பாக கடந்த 1-ந்தேதி பன்னீர்செல்வத்தை கடைவீதி அருகே மர்ம கும்பல் வழிமறித்து பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த பன்னீர்செல்வம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார், 9 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய நபரான வடக்கு மாதவி சாலையை சேர்ந்த முகம்மது காலித் (26) என்ற வாலிபரை பெரம்பலூர் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். கைதான முகமது காலித் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்