நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.;
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, வாலிகண்டபுரம் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை(எண் 6486) நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 9-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரையும் மற்றும் வேப்பந்தட்டை (6437), அன்னமங்கலம் (6450), பரவாய் (கிழக்கு). (6428) ஆகிய டாஸ்மாக் கடைகளுக்கு 12-ந்தேதி ஒரு நாள் மட்டும் விடுமுறையும் அறிவிக்கப்படுகிறது. அந்த நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.