பெண்ணை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 10 ஆண்டு சிறை

பெண்ணை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;

Update: 2021-10-05 20:06 GMT
தாமரைக்குளம்:

தற்கொலை
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வன். இவருடைய மனைவி கலைச்செல்வி(வயது 45). இவர் கடந்த 25.7.2016 அன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அன்புச்செல்வன் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், தனது மனைவியிடம், அதே கிராமத்தை சேர்ந்த ரத்தினம்(59) என்பவர் தகாத முறையில் நடந்து கொண்டதால், அவமானம் தாங்காமல் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, கூறியிருந்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் போலீசார் ரத்தினத்தை கைது செய்தனர்.
10 ஆண்டு சிறை
மேலும் இது தொடர்பான வழக்கு அரியலூர் விரைவு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய ரத்தினத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார், ரத்தினத்தை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்