கொரோனாவுக்கு ஒருவர் பலி

கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்;

Update: 2021-10-05 19:44 GMT
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 76,319 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 622 பேர் உள்ளனர். குணமடைந்த 74 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 74,664 ஆகும். கொரோனாவுக்கு நேற்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 58 வயது ஆண் ஒருவர் உயிரிழந்தார். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,033 ஆக அதிகரித்தது. நேற்று ஒரேநாளில் மட்டும் 4,691 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்