மாநில எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை
மாநில எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை;
காட்பாடி
வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்றும், வருகிற 9-ந் தேதியும் நடைபெறுகிறது. இதற்காக போலீசார் மற்றும் அதிகாரிகள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினத்துடன் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் முடிந்ததால் வெளியூரில் இருந்து வந்து தங்கியிருந்தவர்கள் விடுதிகளையும், தங்கியிருந்த வீடுகளையும் காலி செய்து மாவட்டத்தை விட்டு வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் இன்று (புதன்கிழமை) முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதை முன்னிட்டு மாநில எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது.ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை போலீசார் தீவிர சோதனை செய்தபிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கின்றனர். தொடர்ந்து இரவு பகலாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.