டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

நாகையில் கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2021-10-05 17:17 GMT
நாகப்பட்டினம்:
நாகையில் கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கூடுதல் விலைக்கு மது விற்பனை
தமிழ்நாடு மாநில வாணிப கழக திருச்சி பறக்கும் படையினர் நாகை நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த 23-ந் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 
இந்த ஆய்வின்போது நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்தது தெரிய வந்தது. 
3 பேர் பணியிடை நீக்கம்
இதையடுத்து கடை மேற்பார்வையாளர்(பொறுப்பு) ரவி மற்றும் விற்பனையாளர்கள் முத்தரசன், தேவிசயாள் பிள்ளை ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் நிறுவன நாகை மாவட்ட மேலாளர் ரவி நேற்று உத்தரவிட்டார். 
அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்