வடலூரில் வள்ளலார் அவதார தினவிழா

எளிமையாக நடந்தது

Update: 2021-10-05 17:01 GMT
வடலூர், 
வடலூர் சத்திய ஞானசபையில் வள்ளலாரின் 199-வது அவதார தினவிழா நடைபெற்றது. திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தின் சார்பில் சத்திய ஞானசபை வளாகத்தில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஞானசபையில் சிறப்பு வழிபாடு, திருஅருட்பா இசை நிகழ்ச்சி, சன்மார்க்க சொற்பொழிவு நடந்தது. தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதலின்படி பூஜைகள் எளிமையாக நடந்தது.
இதேபோல் வடலூர் சத்திய தருமச்சாலை மற்றும் வள்ளலார் அவதரித்த மருதூரிலும், வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி (வள்ளலார்) இல்லத்திலும் வள்ளலாரின் 199-வது அவதார தின விழா கொண்டாடப்பட்டது.

மேலும் செய்திகள்