சங்கராபுரம் அருகே சுவர் இடிந்து விழுந்து கொத்தனார் பலி
சங்கராபுரம் அருகே சுவர் இடிந்து விழுந்து கொத்தனார் பலி
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 45). கொத்தனாரான இவர் சங்கராபுரம் அருகே உள்ள காட்டுவன்னஞ்சூரில் கட்டுமான வேலை செய்து வந்தார். அப்போது அங்குள்ள பழைய சுவரை எந்திரத்தால் இடித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து பாண்டியன் மீது விழுந்து அமுக்கியது. இதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவலறிந்து வந்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுவர் இடிந்து விழுந்து பலியான பாண்டியனுக்கு உமா(32) என்ற மனைவியும், கார்த்தி(19) மற்றும் பார்த்திபன்(16) என்ற மகன்களும் உள்ளனர்.