தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க கூடுதலாக 9 வட்டார பார்வையாளர்கள் நியமனம் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க கூடுதலாக 9 வட்டார பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்

Update: 2021-10-05 16:26 GMT
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் ஆணையம் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நாளை(புதன்கிழமை) மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க தேர்தல் நடத்தும் அலுவலர், பறக்கும் படையினர் மற்றும் அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி ஊரக உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்திட மாவட்ட தேர்தல் பொது பார்வையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் 9 வட்டார பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

புகார்களை தெரிவிக்கலாம்

அதன்படி திருக்கோவிலூர் ஒன்றிய வட்டார பார்வையாளராக கீர்த்தனா(செல்போன் நம்பர்-7092999624), திருநாவலூர்-  ராஜவேல் (9894801844), உளுந்தூர்பேட்டை-சாந்தி(63803 90018), ரிஷிவந்தியம்-மஞ்சுளா(74026 06462), கள்ளக்குறிச்சி-பெரியசாமி(94435 38866), சின்னசேலம் முருகன்(86103 56837), சங்கராபுரம்-ராஜாமணி(88703 02086), தியாகதுருகம்-தங்கராஜ்(96008 70410), கல்வராயன்மலை-ஆரோக்கியசாமி(98651 79717) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் நாள், தேர்தலுக்கு முந்தைய நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள் அன்றும் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். 
எனவே பொது மக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான புகார்கள், தேர்தல் நடத்தை விதிகள் குறித்து வட்டார பார்வையாளர்களின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்