மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி

வருசநாடு அருகே மின்சாரம் பாய்ந்து மாணவர் ஒருவர் பலியாகினார்.

Update: 2021-10-05 16:13 GMT
தேனி :

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள கீழபூசணூத்து கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பாண்டி. இவருடைய மகன் அருண்பாண்டி (வயது 16). தர்மராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் ஏறி ஆடுகளுக்கு அருண்பாண்டி தழைகளை பறித்து கொண்டிருந்தார். அப்போது அந்த மரக்கிளை அருகில் சென்ற மின்கம்பி மீது உரசியது. 

இதில் மின்சாரம் பாய்ந்து மரத்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடமலைக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அருண்பாண்டி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 தகவலறிந்த வருசநாடு போலீசார் அங்கு வந்து அருண்பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்