கொலு பொம்மைகள் விற்பனை

கொலு பொம்மைகள் விற்பனை

Update: 2021-10-05 16:11 GMT
உடுமலை,
நவராத்திரி விழாவையொட்டி கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகள் வைக்கப்படும். வீடுகளில் திருமண செட், கிருஷ்ணன் லீலைகள் செட் சாமி அவதாரங்கள் செட் என்பன உள்பட பல்வேறு வகையான கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். இந்த நிலையில் உடுமலை பழனிசாலையில் தனியார் பள்ளிக்கு முன்பு சாலையோரக்கடையில் பல்வேறு வகையில் அழகிய கொலுபொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நாளை (வியாழக்கிழமை)  நவராத்திரி விழா தொடங்குவதையொட்டி பொதுமக்கள் பலர் கொலுபொம்மைகளை வாங்கி செல்கின்றனர்.

மேலும் செய்திகள்