தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் தனியார் பஸ்சில் மாணவர்கள் மேற்கொள்ளும் ஆபத்தான பயணத்தை தடுக்க கோரிக்கை

தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் தனியார் பஸ்சில் மாணவர்கள் மேற்கொள்ளும் ஆபத்தான பயணத்தை தடுக்க வேண்டும்

Update: 2021-10-05 12:40 GMT
தூத்துக்குடியிலிருந்து ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூர் நோக்கி செல்லும் தனியார் பஸ் முழுவதும் நிரம்பி வெளியில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், இளைஞர்களும் முன் வாசலிலும் பின் வாசலிலும ஒற்றைக்காலில் தொங்கி செல்லும் அபாய நிலை உள்ளது. இந்த பஸ் திருச்செந்தூர் செல்வதற்குள் ஆறுமுகநேரியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வேகத்தடைகளை கடந்து செல்லும் போது, பலர் கீழே  விழுந்து  காயமடைந்து வருகின்றனர். பெரும் விபத்து நிகழ்வதற்குள் இப்பகுதியில் மேற்கண்ட நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்கவும், மாணவர்கள் படிகளில் தொங்கி செல்வதை தடுக்கவும் போக்குவரத்து அதிகாரிகளும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்