கட்டாரமங்கலம் கூத்தர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

கட்டாரமங்கலம் கூத்தல் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது

Update: 2021-10-05 11:04 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தர் கோவில் நடராஜரின் பஞ்ச விக்ரக ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக சிவகாமி அம்பாள் மற்றும் அழகிய கூத்தர் உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தியம் பெருமான் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்