சென்னை தி.மு.க. பெண் பிரமுகர் வீட்டில் திருட்டு
தி.மு.க. வட்ட துணைச் செயலாளர் கவுரி வீட்டில் மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது ெதரிந்தது.;
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ஜல்லடியன்பேட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் கவுரி (வயது 55). இவர், தி.மு.க. வட்ட துணைச் செயலாளர் ஆவார். இவர், வீட்டை பூட்டிவிட்டு கோடம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று இரவு வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், 2 உண்டியலில் இருந்த பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது ெதரிந்தது. இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.