லாரிகளில் ஏற்று கூலி, இறக்கு கூலியை சரக்கு உரிமையாளர்களே கொடுக்க வேண்டும்; மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தீர்மானம்

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் வடக்கு மண்டல சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கத்தில் நடைபெற்றது.

Update: 2021-10-05 08:46 GMT
கூட்டத்துக்கு சங்க தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் முன்னிலை வகித்தார். இதில் அமைந்தகரை, மெட்ராஸ், சென்னை லோக்கல், சதர்ன், தென் சென்னை, கிண்டி லோக்கல், ஆரணி, வாணியம்பாடி, குடியாத்தம், வேலூர், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், தமிழ்நாடு எண்ணெய் டேங்கர், தர்மபுரி, அரூர், கிருஷ்ணகிரி மற்றும் மல்டி ஆக்ஸில், மணல் லாரி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வேன் உரிமையாளர்கள், பார்சல் லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வருகிற 15-ந் தேதி முதல் லாரிகளில் ஏற்று கூலி, இறக்கு கூலி, மாமூல், அட்டி கூலி போன்றவற்றை சரக்கு உரிமையாளர்களே கொடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விற்பனையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் சங்க தலைவர் குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எடுத்துள்ள முடிவின்படி வருகிற 15-ந்தேதி முதல் லாரிகளில் ஏற்றப்படும் சரக்குகளுக்கான ஏற்று கூலி, இறக்கு கூலி, மாமூல், அட்டி கூலி, தபால் மாமூல், தார்பாய் கட்டும் கூலி போன்றவற்றை சரக்கு உரிமையாளர்களே கொடுத்து கொள்ள வேண்டும். தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல மாநில அரசு டீசல் விலையை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்