சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி
தஞ்சை அருகே சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.;
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
தொழிலாளி
தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை வடக்குதெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது66). கூலித்தொழிலாளி. இவர் நேற்றுகாலை வீட்டில் இருந்து டிபன் வாங்குவதற்காக கடைத்தெருவுக்கு சைக்கிளில் புறப்பட்டு சென்றார். கடைத்தெருவில் உள்ள டிபன் கடையில் டிபன் வாங்கி கொண்டு வேலைக்கு செல்வதற்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மெயின்ரோட்டில் சென்றபோது நடராஜன் சென்ற சைக்கிள் மீது பின்னால் வந்த லாரி ஒன்று மோதியது.
இதில் நிலைதடுமாறி நடராஜன் சைக்கிளுடன் கீழ விழுந்துவிட்டார். அவர் மீது லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கிவிட்டார். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்து நடராஜனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
சாவு
அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் நடராஜன் மகன் ராஜ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து லாரி டிரைவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குள்ளகாலிகாட்டைச் சேர்ந்த சரவணன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.