ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை;

Update: 2021-10-04 17:17 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 6, 9-ந் தேதிகள் 2 நாட்கள் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து அனைத்து வகை பள்ளிகளும் தேர்தல் வாக்குச்சாவடி மையங்கள் செயல்பட உள்ளது. தேர்தல் பணியில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்ல உள்ளதால் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தேர்தல் நடைபெறும் நாட்கள் ஆன 6, 9-ந் தேதிகளிலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 7-ந் தேதி‌ (வியாழக்கிழமை) பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். 
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்