காட்பாடி வழியாக செல்லும் ரெயிலில் கடத்திவரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்

காட்பாடி வழியாக செல்லும் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பொட்டலங்களை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-10-04 13:38 GMT
காட்பாடி

காட்பாடி வழியாக செல்லும் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பொட்டலங்களை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஓடும் ரெயிலில் சோதனை

ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் இருந்து ரெயில்களில் கஞ்சா, குட்கா, பான்மசாலா உள்ளிட்டவைகளை சிலர் கடத்தி வந்து விற்கின்றனர். இதனை தடுக்க காட்பாடி ரெயில்வே போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை காட்பாடி ரெயில் நிலையத்திற்கு யஷ்வந்த்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயில் பெட்டிகளில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.

21 கிலோகஞ்சா பறிமுதல்

அப்போது பயணிகள் உட்காரும் இருக்கைகளுக்கு அடியில் பைகள் இருந்தன. அவற்றை எடுத்து போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் பைகளில் 21 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை.
கஞ்சா பொட்டலங்களை, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்