பெண்ணை தாக்கியதாக தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கியதாக தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update: 2021-10-03 20:23 GMT
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் யாதவர் தெருவை சேர்ந்தவர் சுமித்ரா(வயது 60). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் விஜி(34) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விஜி, அவரது மனைவி லதா(31) மற்றும் 2 சிறுவர்கள் சேர்ந்து சுமித்ராவை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் சுமித்ரா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்