சாத்தான்குளம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
சாத்தான்குளம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள அடையல் முதலூர் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தரபாண்டி மகன் ஜேக்கப் ெஜபராஜ் (வயது 36). இவர் அங்குள்ள ஒரு கடையில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெபராஜ், எந்திரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெபராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.