வாங்கிய சிகரெட்டுக்கு பணம் கேட்ட கடைக்காரரை தாக்கிய 3 பேருக்கு வலைவீச்சு

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யஞ்சேரி வி.பி.கே. நகர், 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வேலாயுத ராஜா (வயது 43), இவர் தனது வீட்டில் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

Update: 2021-10-03 08:20 GMT
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ், மோகன் அவரது நண்பர் ஆகியோர் வேலாயுத ராஜா கடைக்கு சென்று கடனாக சிகரெட் பாக்கெட் கேட்டனர். முதலில் ஒரு பாக்கெட்டை கடைக்காரர் கொடுத்தார். பின்னர் சில மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு சிகரெட் பாக்கெட், கூல்ட்ரிங்ஸ் போன்றவற்றை 3 பேரும் கேட்டனர். அதற்கு கடைக்காரர் சிகரெட் பாக்கெட், கூல்டிரிங்ஸ் போன்றவை அந்த நபர்களிடம் கொடுத்துவிட்டு பணம் கேட்டுள்ளார். இதற்கு லோகேஷ், மோகன் உள்பட 3 பேரும் நாங்கள் இந்த பகுதி ரவுடிகள். எங்களிடம் பணம் கேட்கிறாயா என்றுகூறி கடையில் இருந்த கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை எடுத்து கீழே போட்டு உடைத்தனர். பி்ன்னர் வேலாயுத ராஜாவை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு அங்கிருந்து 3 பேரும் தப்பிச்சென்று விட்டனர். காயம் அடைந்த வேலாயுத ராஜா பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து வேலாயுத ராஜா கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்