காந்தி ஜெயந்தியையொட்டி மாணவர்களுடன் இணைந்து அரசு பள்ளியில் மரக்கன்றுகளை நட்ட போக்குவரத்து போலீசார்
மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து போக்குவரத்து போலீசார் தீவிர விழிப்புணர்வு முகாம்களை ஏற்படுத்தியும், தனியார் அமைப்புகளின் மூலம் மரக்கன்றுகளை நட்டும் வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக காந்தி ஜெயந்தியையொட்டி குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் போக்குவரத்து இணை கமிஷனர் லலிதா லட்சுமி, போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் தலைமையில் தனியார் அமைப்பு மூலம் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மாணவர்களுடன் இணைந்து நடப்பட்ட மரக்கன்றுகளை மாணவர்கள் தொடர்ந்து பாதுகாக்க வேண்டுமென்றும் மரத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். பள்ளி வளாகத்தில் வளர்க்கப்படும் மரக்கன்றுகளை மாணவர்கள் பராமரிக்க வேண்டும் வேறு இடங்களிலும் மரக்கன்றுகளை நட வேண்டும் எனவும் தெரிவித்தார். இயற்கையிடம் நாம் பெற்று கொண்டதை திருப்பிதரும் வகையில் அனைவரும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.