பஸ் நிறுத்தத்தில் மயங்கி விழுந்தவர் பரிதாப சாவு
விருதுநகர் அருகே பஸ் நிறுத்தத்தில் மயங்கி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள சங்கு ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல் (வயது 65). பட்டாசு ஆலையில் கணக்கராக வேலை பார்த்த இவர் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஆமத்தூர் பஸ் நிறுத்தத்தில் படுத்திருந்தபோது அங்கேயே மயங்கி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.