கடலை செடிகள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம்
கனமழையால் கடலை செடிகள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆதனக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. ஆதனக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆதனக்கோட்டையில் பெய்த கனமழையால் விவசாயி ஒருவரது வயலில் தேங்கிய மழைநீரில் கடலைக் கொடியை பிடுங்கி கடலையை பிரித்தெடுக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் 5 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் தாங்கள் பயிரிட்டுள்ள கடலை செடிகள் அழுகி கடலைகள் முளைத்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆதனக்கோட்டை சுற்றுவட்டார விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.