கோபி பகுதியில் விடிய விடிய மழை கொள்முதல் மையங்களில் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்
கோபி பகுதியில் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் நெல் கொள்முதல் மையங்களில் வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் ஆனது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கோபி பகுதியில் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் நெல் கொள்முதல் மையங்களில் வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் ஆனது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
விடிய விடிய மழை
கோபி அருகே உள்ள புதுக்கரைபுதூர், நஞ்சகவுண்டன்பாளையம், மேவாணி, கள்ளிப்பட்டி, காசிபாளையம், நஞ்சைபுளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக கோபி பகுதியில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய கோபி பகுதியில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசின் சார்பில் நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த கொள்முதல் மையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ய ெதாடங்கியது. இந்த மழை விடிய விடிய பெய்தது.
விவசாயிகள் வேதனை
இதில் நஞ்சகவுண்டன்பாளையம், பொலவக்காளிபாளையம், புதுக்கரைபுதூர் ஆகிய பகுதியில் உள்ள நெல் கொள்முதல் மையங்களில் வைக்கப்பட்டு உள்ள 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முற்றிலும் சேதமடைந்தது.
மழையால் நனைந்த நெல் மணிகள் முளைத்து விட்டதால் விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘நஞ்சகவுண்டன்பாளையத்தில் உள்ள நெல் கொள்முதல் மையத்தில் போதிய இடவசதி இல்லை. இதனால் அங்குள்ள தென்னந்தோப்புக்குள் நெல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த 15 நாட்களுக்கும் ேமலாக நெல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.
5 ஆயிரம் மூட்டைகள்
இந்த மையத்தில் தினமும் 1000 மூட்டைகள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் நெல் மூட்டைகள் அதிக அளவில் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இதன்காரணமாக விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய 15 முதல் 20 நாட்கள் வரை தாமதம் ஆகிறது. தற்போது பெய்து உள்ள மழை காரணமாக கோபி பகுதி கொள்முதல் மையங்களில் வைக்கப்பட்டு உள்ள 5 ஆயிரம் நெல் மூட்டைகள் முழுமையாக சேதம் உடைந்து உள்ளது. எனவே மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்,’ என்றனர்.