பட்டறைகளில் ஆயுதங்கள் கேட்பவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்

பட்டறைகளில் ஆயுதங்கள் கேட்பவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என துணை போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

Update: 2021-09-30 20:40 GMT
விருதுநகர், 
பட்டறைகளில் ஆயுதங்கள் கேட்பவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என துணை போலீஸ் சூப்பிரண்டு கூறினார். 
7 ேபர் கைது 
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தலின் பேரில் தமிழகம் முழுவதும் வன்முறை செயல்களை தடுக்கும் பொருட்டு ரவுடிகளின் மீது கூட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
விருதுநகர் மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் வழிகாட்டுதலின் பேரில் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா தலைமையில் விருதுநகர் கோட்டத்தில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் 7 பேர் கைது செய்யப்பட்டு காவலுக்கு அனுப்பிவைத்தனர். 26 பேர் மீது பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றத்தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 
ஆயுதங்கள் 
53 பேரிடம் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. முன்னிலையில் நன்னடத்தை பத்திரம் பெறப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா தெரிவித்தார்.  மேலும் நகரில் விவசாய கருவிகள் மற்றும் இரும்பு தளவாடங்கள் செய்யும் பட்டறைகளுக்கு சென்று யாரேனும் ஆயுதங்கள் மற்றும் கூர்மையான தளவாடங்கள் கேட்டால் அது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு துணை போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக்கொண்டார்.
 மேலும் ஆட்டோ டிரைவர்களை அழைத்து குற்றநடவடிக்கையில் ஈடுபட யாரேனும் அந்த நோக்கத்தோடு ஆட்டோவை வாடகைக்கு எடுத்தாலோ அல்லது அது பற்றி பேசினாலோ போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். தகவல் தெரிவிப்பவரின் விவரம் குறித்து ரகசியம் காக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்