தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
2020-21-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி மயிலாடுதுறையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
மயிலாடுதுறை:
2020-21-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி மயிலாடுதுறையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
2020-21-ம் ஆண்டுக்கான காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை உடனே வழங்கக்கோரி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விசுவநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
2020- 21-ம் ஆண்டு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை உடேன வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் கடன் கொடுப்பதற்கு விதிக்கும் நிபந்தனைகளை திரும்ப பெறுவதோடு, பழைய நடைமுறையை பின்பற்றி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும்.
சிட்டா, அடங்கல்
ரபி பருவத்திற்கு சிட்டா, அடங்கல் வழங்கி காப்பீடு செய்வதையும், கடன் வழங்குவதையும் உறுதிப்படுத்தவேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஒரே மாவட்டத்தில் பணி புரிந்துவரும் வேளாண் அலுவலர்களை இடமாற்றம் செய்து வெளிப்படையான நிர்வாகத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதை தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் அளித்தனர். அப்போது விவசாய சங்க பொறுப்பாளர்கள், பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.