கொத்தனாருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நாகை போக்சோ சிறப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

Update: 2021-09-30 17:48 GMT
நாகப்பட்டினம்:
மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நாகை போக்சோ சிறப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
பாலியல் பலாத்காரம்
நாகை மாவட்டத்தை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க கொத்தனார் ஒருவர் தனது 13 வயதான மகளை கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்தார். 
இதுகுறித்து அவரது மகள் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொத்தனாரை கைது செய்தனர்.
சாகும்வரை ஆயுள் தண்டனை
இந்த வழக்கு நாகை மாவட்ட போக்சோ சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி நேற்று தீர்ப்பு வழங்கினார். 
அந்த தீர்ப்பில் அவர், மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், பாலியல் உணர்வை தூண்டியதற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கும்படியும் அவர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து கொத்தனாரை போலீசார் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைப்பதற்காக அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்