வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய், மகளிடம் நகை பறிப்பு

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய்,மகளிடம் நகை பறிப்பு;

Update: 2021-09-30 17:37 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் அருகிலுள்ள ஆனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் காந்தம்மாள் (வயது 58). இவரது மகள் கஸ்தூரி. நேற்று முன்தினம் இரவு காந்தம்மாள் வீட்டின் வெளியேயும், கஸ்தூரி வீட்டுக்குள்ளும் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் காந்தம்மாள் மற்றும் கஸ்தூரியின் கழுத்திலிருந்த தங்க செயினை நைசாக பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். 

நேற்று காலை எழுந்தபோது கழுத்தில் செயில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து மங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்