வாணாபுரம் அருகே தேனீக்கள் கொட்டியதில் முதியவர் சாவு

தேனீக்கள் கொட்டியதில் முதியவர் சாவு

Update: 2021-09-30 17:31 GMT
வாணாபுரம்

வாணாபுரம் அருகே உள்ள நவம்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 66) விவசாயி. இவர் நேற்று மாலை தனக்கு சொந்தமான மாடுகளை விவசாய நிலம் அருகே மேய்த்து கொண்டிருந்தார். 
அப்போது பனைமரத்தில் இருந்த தேனீக்கள் மணியை கொட்டியது. இதில் அவர் சுயநினைவை இழந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்