மூங்கில்துறைப்பட்டு அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மூங்கில்துறைப்பட்டு அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை கோட்டாட்சியர் விசாரணை

Update: 2021-09-30 16:35 GMT
மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி அம்பிகா(வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. திசியா(4) என்ற மகளும், மோக்சீத்தியாஸ்(2) என்ற மகனும் உள்ளனர். 

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அம்பிகா சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல்அறிந்து வந்த வடபொன்பரப்பி போலீசார் அம்பிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குப்பதிவு செய்தார். மேலும் திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமையால் அம்பிகா தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்