ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்

போடியில் ஆட்டோ டிரைவரை 3 பேர் வழிமறித்து தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர்.

Update: 2021-09-30 14:47 GMT
போடி: 

போடி மூணாறு சாலையில் உள்ள முந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 25). ஆட்டோ டிரைவர். இவர், நேற்று மாலை பயணிகளை இறக்கிவிட்டு, போடி இரட்டை வாய்க்கால் அருகில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது போடி புதூரை சேர்ந்த ஜெயபாண்டி, முருகன், கவுதம் ஆகியோர் அவரை வழி மறித்தனர். 


அந்த பகுதிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தது குறித்து தகராறு செய்தனர். பின்னர் அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு, அங்கு இருந்து 3 பேரும் தப்பி சென்றனர்.  

படுகாயமடைந்த அருண்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு போடி அரசு மருத் துமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போடி நகர் போலீசில் அருண்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிேயாடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்