காய்ச்சல் தடுப்பு முகாம்
கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஊராட்சியில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது.;
கம்பம்:
கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஊராட்சியில் காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் தடுப்பு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
ஆரம்ப சுகாதாரநிலைய சித்த மருத்துவர் சிராஜ்தீன் கொரோனா மற்றும் டெங்கு நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. பின்னர் வீடுகள் தோறும் கபசுர குடிநீர் பொடி வழங்கப்பட்டன.இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெயந்தி மாலா, சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.