செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் முன்னிலையில் ஆய்வு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ராகுல் நாத் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

Update: 2021-09-30 11:13 GMT
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தடோர் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளர், ஊரக உள்ளாட்சி் தேர்தல் பார்வையாளர் சம்பத் தலைமை தாங்கினார். தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நோடல் அலுவலர்கள் ஆகியோருடன் தேர்தல் நடத்தை விதிகள் செயல்பாடுகள் மற்றும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், மகளிர் திட்ட இயக்குநர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்