பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கோஷ்டி மோதல்; வாகனங்கள் தீ வைத்து எரிப்பு

சென்னை டி.பி.சத்திரத்தில் உள்ள சமுதாய நல கூடத்தில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நேற்று முன்தினம் இரவு இரு குழுவினர் பயங்கர கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

Update: 2021-09-30 09:45 GMT
இந்த தாக்குதலின் உச்ச கட்டமாக தெருவில் நின்ற 4 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் ரமேஷ் மேற்பார்வையில், டி.பி.சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்