காசிமேட்டில் கோவிலில் 3 கிலோ எடையுள்ள முருகன் உலோக சிலை திருட்டு
சென்னை காசிமேடு சூரிய நாராயண சாலையில் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பால சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.;
இந்த கோவிலை நேற்று காலை வழக்கம் போல் அறங்காவலர் அலமேலு சென்று திறந்துள்ளார்.அப்போது கோவிலில் உள்ள மூலவர் சிலை அருகில் இருந்த 3 கிலோ எடையுள்ள செம்பு மற்றும் பித்தளை கலந்த உலோகத்திலான முருகர் உற்சவர் சிலை திருட்டு போயிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.உடனடியாக சிலை காணாமல் போனது குறித்து சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழங்கால சிலை பெரிய விலை போகும் என்பதால் மர்ம நபர்கள் திருடிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.