விவசாய பணிகள் மும்முரம்

காரியாபட்டி பகுதியில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.;

Update: 2021-09-29 20:33 GMT
காரியாபட்டி, 
காரியாபட்டி பகுதியில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 
நெல் சாகுபடி 
காரியாபட்டி தாலுகா முடுக்கன்குளம், அல்லாளப்பேரி, மறைக்குளம், வி.நாங்கூர், டி.வேப்பங்குளம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள கிராம மக்கள் அனைவரும் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
காரியாபட்டி பகுதியில் நெல், கடலை, பருத்தி, எள், வெங்காயம் போன்ற பயிர்கள் பயிரிட்டு வருகின்றனர். இந்த பகுதி முழுவதும் மழை பெய்தால் தான் விவசாயம் செய்ய முடியும். மழை சரியாக பெய்து கண்மாய்களுக்கு தண்ணீர் வரவில்லை என்றால் விவசாய செய்ய முடியாது. தற்போது கடந்த சில நாட்களுக்கு முன் காரியாபட்டி பகுதியில் பெய்த மழையினால் ஒரு சில கண்மாய்களுக்கு மட்டுமே ஓரளவு தண்ணீர் வந்துள்ளது. 
நடவு பணி 
இந்த தண்ணீரை வைத்து நாற்று பாவுதல் மற்றும் நாற்று நடவு செய்யும் பணி ஆகிய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒரு சில கிராமங்களில் கண்மாய்களுக்கு தண்ணீர் வராததால் போர்வெல் மூலம் வயலில் தண்ணீர் பாய்ச்சி விவசாயிகள் நாற்று நடவில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த ஆண்டு மழை பெய்வது தள்ளிக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. விவசாயிகள் ஆடி 18-அன்று நாற்றுப்பாவி ஆவணி, புரட்டாசி மாதங்களில் நடவு முடித்துவிடுவார்கள் ஆனால் இந்தாண்டு ஒரு சில கிராமங்களில் மட்டுமே நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஏராளமான கிராமங்களில் கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால் நடவு பணி நடைபெறவில்லை என்கின்றனர் விவசாயிகள்.

மேலும் செய்திகள்