புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

ஏர்வாடியில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-29 19:44 GMT
நெல்லை:
ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கோபால லிங்கம் தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது டோனாவூர் செட்டிமேடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 35) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 கிலோ 680 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்