கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது;

Update: 2021-09-29 19:42 GMT
சமயபுரம், செப். 30-
மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சுணைபுகநல்லூர் மேட்டு தெருவை சேர்ந்த மொட்டையன் மகன் வடிவேலு (வயது 28), முசிறி அருகே உள்ள பெரிய கொடுந்துறை அரிசன தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் ராகவன் (21) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில் வழிப்பறி, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என தெரியவந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந்் தேதி மண்ணச்சநல்லூர் சிப்பாய் பண்ணை பகுதியில் பட்டா கத்தியை காட்டி மிரட்டி 7½ தங்க சங்கிலியை பறித்து சென்றது,  மதுரை அருகே உள்ள திருமங்கலம் டாஸ்மாக் கடை விற்பனையாளரை மிரட்டி ரூ.53 ஆயிரத்தை பறித்து சென்றது, காதல் ஜோடியை மிரட்டி மோட்டார் சைக்கிள், 5 பவுன் நகை, ரூ.6 ஆயிரம் பறித்தது உள்ளிட்ட வழக்குகளில் தொடர்பு உடையவர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து 2½ பவுன் நகை மற்றும் பட்டாக்கத்தி, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்