அடிபம்புக்கு மாலை அணிவித்து நூதன போராட்டம்

பாளையங்கோட்டையில் அடிபம்புக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2021-09-29 19:24 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளை நகரில் குடிதண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக 12 இடங்களில் அடிபம்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக இந்த அடிபம்புகள் பழுதாகி தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி நேற்று அடிபம்புகளுக்கு மாலை அணிவித்து தேங்காய், பழம் வைத்து பூஜை செய்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “இந்த பகுதியில் உள்ள அடிபம்புகளை விரைவில் பழுது நீக்கம் செய்யாவிட்டால் அந்த அடிபம்புகளை சுற்றி செங்கல் வைத்து ஜீவசமாதி போராட்டம் நடத்துவோம்” என்றனர்.

மேலும் செய்திகள்