மின் கம்பியில் அடிபட்டு மயில் சாவு
மின் கம்பியில் அடிபட்டு மயில் செத்தது
மணமேல்குடி:
மணமேல்குடி தெற்கூர் அம்மன்கோவில் தெருவில் உள்ள ஒரு மின்கம்பியில் அடிபட்டு மயில் இறந்து கிடப்பதாக மணமேல்குடி வனத்துறைக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சென்ற வனச்சரகர் சதாசிவம், வனவர் ராஜேந்திரன், வேட்டைத்தடுப்பு காவலர் முத்துராமன் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மயிலை மீட்டனர். பின்னர் கால்நடை மருத்துவர் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மயிலை கோடியக்கரை காட்டுப்பகுதியில் புதைத்தனர்.