வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது

வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-09-29 19:21 GMT
தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அங்கராயநல்லூரை சேர்ந்த விஸ்வநாதன் மகன் விஜயகுமார் (வயது 27). இவர்களது பக்கத்து வீட்டை சோ்ந்த தேவேந்திரன் மகன் சண்முகம் (22). இருவருக்கும் வீட்டுமனை தொடர்பாக எல்லைப் பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் சண்முகம், விஜயகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் விலாவிலும், கழுத்திலும் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த விஜயகுமார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தா.பழூர் போலீசில் விஜயகுமார் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்து சிறையில் அடைத்தார்.

மேலும் செய்திகள்