தனியார் ஆஸ்பத்திரியில் பணம் திருடிய வாலிபர் கைது

நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-29 19:13 GMT
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 70). இவர் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பெருமாள் ரத வீதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் சுப்பிரமணியன் வேலைக்கு வந்தார். பின்னர் தனது சட்டையை கழட்டி அதில் ரூ.2 ஆயிரத்தை வைத்து ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு அறையில் வைத்தார். பின்னர் அவர் சீருடையை அணிந்து கொண்டு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து சுப்பிரமணியன் தனது சட்டைப்பையை பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நெல்லை அருகே உள்ள வடக்கு தாழையூத்து பகுதியை சேர்ந்த தங்கதுரை (32) என்பவர், ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தபோது சுப்பிரமணியனின் சட்டைப்பையில் இருந்த ரூ.2 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் தங்க துரையை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்