பொட்டல்குளம் புனித லூர்து மாதா கெபி திறப்பு
பாளையங்கோட்டை பொட்டல்குளம் புனித லூர்து மாதா கெபி திறப்பு விழா நடந்தது.
இட்டமொழி:
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளையங்கோட்டை வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட அரியகுளம் பஞ்சாயத்தில் உள்ள பொட்டல்குளத்தில் புனித லூர்து மாதா கெபி கட்டப்பட்டு அதன் அர்ச்சிப்பு மற்றும் திறப்பு விழா நடைபெற்றது. பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் எஸ்.அந்தோணிசாமி ஆண்டகை அர்ச்சிப்பு செய்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீவெல்லபிரசாத், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், மாநில ஓ.பி.சி. பிரிவு துணைத்தலைவர் வக்கீல் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பங்கு தந்தை எம்.சார்லஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.