ஆத்திகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு
ஆத்திகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு
மதுரை
மதுரை ஆத்திகுளத்தை சேர்ந்த கனகராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழக பொதுப்பணித்துறையின் கீழ் பெரியாறு-வைகை வடிநில கோட்ட நிர்வாகத்தின் கீழ் வரும் மதுரை ஆத்திகுளம் மற்றும் பெரிய புளியங்குளம் கண்மாய் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. கண்மாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆழப்படுத்தி மழை நீரை தேக்கி வைத்தால் ஆத்திகுளம், ஐலேண்ட்நகர், மகாலட்சுமி நகர், கே.வி.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதியில் நிலத்தடி நீர் உயரும். எனவே ஆத்திகுளம் கண்மாய் கரைகளில் சிறுவர் பூங்காகளை அமைக்கவும், கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீரை தேக்கி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த வழக்கு குறித்து அதிகாரிகள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.