சரக்கு ஆட்டோ மோதி ஒருவர் படுகாயம்

சரக்கு ஆட்டோ மோதி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2021-09-29 18:38 GMT
நொய்யல்,
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா அணியாப்பூர் அருகே கத்திக்காரன் பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர் தனது சித்தப்பாவை பார்ப்பதற்காக நொய்யல் அருகே நடையனூர் பகுதிக்கு வந்தார். பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் நடையனூரில் இருந்து சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாணப்பரப்பு பிரிவு சாலையில் இருந்து புகளூர் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ ஒன்று ஆறுமுகம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. 
இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகத்தை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த வேலுசாமி (58) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்