காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மாவட்டத்தில் நாளை மறுநாள் மதுக்கடைகள் மூடல் கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மாவட்டத்தில் நாளை மறுநாள் மதுக்கடைகள் மூடல் கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவு

Update: 2021-09-29 18:26 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை மறுநாள் (சனிக்கிழமை) இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு உத்தரவின்படி நாளை மறுநாள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை மூடி வைக்கவேண்டும். இதனை மீறி அன்று இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்