வேலகவுண்டம்பட்டி அருகே மொபட் மீது சரக்கு ஆட்டோ மோதல்; பெண் பலி தந்தை படுகாயம்

வேலகவுண்டம்பட்டி அருகே மொபட் மீது சரக்கு ஆட்டோ மோதல்; பெண் பலி தந்தை படுகாயம்;

Update: 2021-09-29 18:26 GMT
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சுங்ககாரம்பட்டி வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 65). விவசாயி. இவர் தனது மகள் தங்கம்மாளை (45) தனது மொபட்டில் அழைத்து கொண்டு வேலகவுண்டம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். 
அப்போது வேலகவுண்டம்பட்டி‌ அருகே‌ சென்றபோது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மொபட் மீது மோதியது. இதில் மொபட்டின் பின்னால் ‌அமர்ந்து‌ சென்ற தங்கம்மாள் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த துரைசாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற வேலகவுண்டம்பட்டி போலீசார் தங்கம்மாளின் உடலை‌ கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மொபட் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சரக்கு ஆட்டோ டிரைவர் வேலகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் மணிகண்டனை (வயது 19) என்பவரை கைது செய்தனர்.
========

மேலும் செய்திகள்