ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் மழைநீர் தேங்காமல் கண்காணிக்க வேண்டும்
ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் மழைநீர் தேங்காமல் கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் மழைநீர் தேங்காமல் கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் ஆய்வு
ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட ரயில் நிலையம் ஜங்சன் பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
நகராட்சி 8-வது வார்டு பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய் தூய்மைப்படுத்தும் பணி, கட்டேரி ஊராட்சியில் உள்ள பக்கிரிதக்கா ெரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கண்காணிக்க வேண்டும்
அப்போது தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மழைநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்தால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் தேங்காதவாறு கண்காணிக்க வேண்டும் எனவும் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தனபாண்டியன், நகராட்சி பொறியாளர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.